search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் போன்"

    • போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகளை ஹிஸ்புல்லா பயன்படுத்தியுள்ளது.
    • டெக்னலாஜிக்ல் வார்ஃபேரின் மீது அனைவரின் கவனமும் தற்போது திரும்பியுள்ளது.

    லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பலரின் செய்தி பரிமாற்ற பேஜர்கள் நேற்றைய தினம் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 3000 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். தைவானில் உள்ள GO APPOLO நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்து பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்ட இந்த பேஜர்கள் இந்த வருட தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மொபைல் போன்களில் தகவல்கள் கசியும் அபாயம் உள்ளதால் பேஜர் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தயாரிக்கப்படும்போதே இந்த பேஜர்களில் 3 கிராம் வெடிபொருள் வைக்கப்பட்டது என்றும் இதற்கு பின்னால் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட்டின் கை உள்ளதாகவும் கூறப்படுகிறது. பல நாட்கள் திட்டமிடப்பட்டு ஒரே நாளில் ஹேக்கிங் மூலம் இந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது பலரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    சினிமாவில் வருவது போல் இதுபோன்ற பெரிய அளவிலான தாக்குதலை ஹேக்கிங் மூலம் செய்ய முடியும் என்று நிரூபணமாகியுள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் அனைவரும் கைகளிலும் உள்ள ஸ்மார்ட் போன்களை இதுபோன்ற ஹேக்கிங் மூலம் அடுத்தடுத்து வெடிக்க செய்ய முடியுமா என்ற கேள்வியே பலருக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. கத்தி, துப்பாக்கி, ஏவுகணை, பையோ வார் என்பதைத் தாண்டி டெக்னலாஜிக்ல் வார்ஃபேரின் மீது அனைவரின் கவனமும் தற்போது திரும்பியுள்ளது.

     

    ஸ்மார்ட் போன்களையும் பேஜர்கள் வெடிக்கச் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பேஜர்கள் போலல்லாதது போன்களை வெடிக்க வைக்கும் நடைமுறை கொஞ்சம் சிக்கலானது. பேஜர்களின் பயன்படுத்தப்படும் அதே லித்தியம் அயான் பேட்டரிகள் தான் சிமார்ட் போன்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆற்றலை தக்கவைத்து கொள்வதால் லித்தியம் அயான் பேட்டரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

    அதிக ஆற்றலை சேமிக்கும் என்றபோதே அதிக சூடேறும் மற்றும் வெடிக்கும் என்பதும் நிச்சயமாகிறது. அதிக சூட்டினால் போன்கள் வெடிக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருவதே. தயாரிக்கப்படும்போது ஏற்படும் கோளாறுகளாலும் வாங்கிய சிறிது நாட்களிலேயே போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கிறது. ஆனால் தயாரிக்கப்படும்போது திட்டமிட்டு தற்போது நடத்த பேஜர் தாக்குதல் போல நடத்த முடியும். ஹிஸ்புல்லா விவகாரத்தில் முன்கூட்டியே பேஜர்களில் வெடிமருந்து வைக்கப்பட்டிருப்பதையும் அதை ஒரே நேரத்தில் வெடிக்க வைக்க ரிமோட் மூலமான கோஆர்டிநேட்டிங் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     

    மிகவும் எளிமையான பேஜர்களிலேயே இந்த கோஆர்டி நேட்டிங் தொழில்நுட்பம் பொருத்தப்படும் நிலையில் அதிக சிக்கலான சாப்ட்வெர் மற்றும் மெட்வொர்க் கனெக்ஷன் கொண்ட ஸ்மார்ட் போன்களில் இதை பயன்படுத்துவது மிகவும் சுலபம். ஒவ்வொருவரும் வெவேறு ஸ்மார்ட் போன்கள் பிராண்டுகளை பயன்படுத்துவதால் இதன் சாத்தியம் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் ஹார்ட்வேர் மூலம் அல்லாது சாப்ட்வேர் மூலம் அனைத்து போன்களையும் அணுகுவது எளிதாக உள்ளதால் தகவல்களை திருடும் சைபர் தாக்குதல்கள் வெடிவிபத்துகளை ஏற்படுத்தும் அளவுக்கு பயங்கரவாத நோக்கத்திற்கு பயன்படுத்தப்படும் சாத்தியக்கூறுகளையும் நிபுணர்கள் முன்வைக்கின்றர்.

    பேஜர் விவகாரத்தில் ஸ்பாட்வேர் மூலம் ஹேக் செய்யப்பட்டு லித்தியம் அயான் பேட்டரிகளுக்கு ஓவர் ஹீட் கொடுக்கப்பட்டு அதன்மூலம் வெடிமருந்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. இதே ஓவர் ஹீட்டிங் நடைமுறையை ஹேக்கிங் மூலம் பயன்படுத்தி பேஜர்களை விட அதிக சக்தி உடைய லித்தியம் அயான் பேட்டரி கொண்ட போன்களையும் வெடிக்க வைக்க முடியும் என்பதே நிபுணர்கள் எட்டியுள்ள முடிவாகும். 

    • செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும்.
    • 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.

    "Nothing Phone 2a Plus" இந்தியா உள்பட உலகளவில் வருகிற 31-ந்தேதி ரிலீஸ் ஆகும் என நத்திங் (Nothing) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என துணை-நிறுவனர் கார்ல் பெய் உறுதி அளித்துள்ளார்.

    செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும். முன்னதாக 32 மெகா பிக்சல் கொண்டதாக இருந்தது. இந்த பிளஸ் மாடல் 50W சற்று கூடுதல் சார்ஜிங் ஸ்பீடு கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீடியாடெக் டைமென்சிட்டி 7350 சிப்செட்டால் (MediaTek Dimensity 7350 chipset) இயக்கப்படும். 12GB ரேம் வரை ஒத்துழைக்கக் கூடி கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்

    8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்புடன் கருப்பு மற்றம் கிரே கலரில் கிடைக்கும்.

    • ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்ட போன்களை வெளியிட இருக்கிறது.
    • ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒப்போ ரெனோ 12 5ஜி செல்வோனை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்காக இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், இதெற்கான ஒரு பகுதியை உருவாக்கி சீரிஸ்களை லிஸ்ட் செய்துள்ளது. இந்த சீரிஸ் வகை போன்கள் ஏய் பீச்சர்ஸ் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்டதாக இருக்கும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    இந்த போன்கள் கூகிள் ஜெமினி அடிப்படையிலான ஏஐ சம்மரி, ஏஐ ரெகார்டு, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர், ஏஐ ஸ்பீக் பீச்சர்ஸ்களை கொண்டதாகவும் இருக்கும்.

    ரெனோ 12 மீடியாடெக் டைமென்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டதாகவும், ரெனோ 12 ப்ரோ மீடியாடெக் டைமென்சிட்டி 9200+ ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டாகவும் இருக்கும்.

    இரண்டு சீரிஸ் போன்களும் 50எம்பி மற்றும் 8எம்பி டுயல் கேமரா செட்டப் கொண்டதாகவும் இருக்கும். 50எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளதாக இருக்கும்.

    5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டதாகவும் இருக்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் கலர்ஓஎஸ்-ல் செல்போன் இயங்கும்.

    ரெனோ 12 கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் கொண்ட 12 6.7 இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டது. 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எபோனி பிளாக், மில்லேனியம் சில்வர், சாஃப்ட் கலர்களில் கிடைக்கும்.

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    அரியலூர்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்’ போன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி 774 அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போனை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், 

    அங்கன்வாடி மையங்கள் மூலம் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சேவையை சிறப்பாக செய்வதற்கும், அங்கன்வாடி பணியார்களிடம் இருந்து துல்லியமாக அறிக்கைகளை பெறவும், திட்ட சேவைகளை உரிய நேரத்தில் உரிய பயனாளிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ‘ஸ்மார்ட்‘ போன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ‘ஸ்மார்ட்’ போனில் சி.ஏ.எஸ். என்கிற செயலி உள்ளது. அதன் மூலமாக அங்கன்வாடி பணியாளர்கள் குடும்ப நிர்வாகம், தினசரி உணவளித்தல், வீடுகள் பார்வைத் திட்டமிடல், வளர்ச்சி கண்காணிப்பு, வீட்டிற்கு கொண்டு செல்லப்படும் இணை உணவு, தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய விவரம், அங்கன்வாடி மைய மேலாண்மை, மாதாந்திர முன்னேற்ற அறிக்கை போன்ற அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்றார்.

    இதில் திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) (பொறுப்பு) புவனேஸ்வரி, உதவித்திட்ட அலுவலர் அன்பரசி, போஜன்அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் முதல் முறையாக ஸ்மார்ட் போனில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள க.எறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையமும், விஞ்ஞான் பிரசார் நிறுவனமும் இணைந்து தேசிய அளவிலான இணைய வழி திறனறிதல் தேர்வினை நடத்தியது.

    இந்த தேர்வை, 6, 7, 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 33 பேர் ஸ்மார்ட் போன், மடிக்கணினியை ஆகியவற்றை பயன்படுத்தி எழுதினர். தேர்வினை பள்ளி தலைமை ஆசிரியை சகுந்தலா தொடங்கி வைத்தார். தேர்வு மைய கண்காணிப்பாளராக ஆசிரியர் ராமச்சந்திரன் செயல்பட்டார்.

    இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், பள்ளி ஒருங்கிணைப்பாளருமான குழந்தைவேல் செய்திருந்தார். பெரம்பலூர் மாவட்டத்திலே முதல் முறையாக அரசு பள்ளியில் இணைய வழி திறனறிதல் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது.
    பெற்றோர்களின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. #SmartPhones
    வாஷிங்டன்:

    உலகமெங்கும் ஸ்மார்ட் போன் செயல்பாடு அதிகரித்து வருகிறது. அதை அறிவுப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவதை விடுத்து தேவையற்றவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    குறிப்பாக பெற்றோர்களின் ‘ஸ்மார்ட் போன்’ செயல்பாட்டினால் குழந்தைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்காவின் இல்லினாய்வ் மாகாண பல்கலைக் கழகம், மிக்சிகன் பல்கலைக் கழகங்களை சேர்ந்த நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    பொதுவாக சில பெற்றோர்கள் நாள் ஒன்றுக்கு 9 மணி நேரத்தை டெலிவி‌ஷன், கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களில் செலவிடுகின்றனர். அவற்றை குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடும் நேரம், விளையாடும் நேரம், மற்றும் தூங்கும் நேரங்களிலும் பயன்படுத்துகின்றனர்.


    அதை பார்க்கும் குழந்தைகள் தாங்களும் பெற்றோரின் நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர். படிப்பிலும், வேறு சில அறிவுப்பூர்வமான செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ஸ்மார்ட் போன்கள், டெலிவி‌ஷன்கள் மற்றும் கம்ப்யூட்டரில் நேரங்களை செலவிடுகின்றனர்.

    இதனால் குழந்தைகளின் படிப்பும், உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. எனவே பெற்றோர்கள் குடும்ப நலனுக்கு செலவிடும் நேரங்களை பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி பழக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    இந்த ஆய்வு 172 குடும்பத்தினரிடம் நடத்தப்பட்டது. அதில் பெற்றோருடன் 5 வயது மற்றும் அதற்கு குறைந்த வயது குழந்தைகள் பங்கேற்றனர். #SmartPhones
    ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.
    நல்ல பழக்க வழக்கங்கள், செயல்கள் கசப்பு மருந்தை போன்றவை. கசப்பு மருந்தை யாரும் விரும்புவதில்லை; ஆனால் உடலுக்கு நல்லது. உண்மையே பேசவேண்டும் என்று உறுதி எடுத்து அதன்படி நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து காட்டுவது சிரமம்.

    கெட்ட விஷயங்கள்-பழக்கங்கள் இனிப்பு மருந்தை போன்றவை. அவை எளிதில் நம்மை ஒட்டிக்கொளம்.

    சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்ததற்கு சமூக ஊடகங்களின் தாக்கமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக ஸ்மார்ட் போன்களின் வருகை இதில் முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

    இந்த போன்கள் இல்லாத இளைய சமுதாயத்தை இப்போது பார்க்க முடியாது. பஸ், ரெயில் பயணங்கள், பூங்கா போன்ற பொது இடங்கள் என எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் தலைகுனிந்தபடி செல்போனில் எதையோ பார்த்துக்கொண்டு-தேடிக்கொண்டு இருப்பதை காணலாம். எங்கிருந்தபடியும் உள்ளங்கையில் இருக்கும் செல்போன் மூலம் உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. தகவல் தொழில்நுட்ப புரட்சியால் கிடைத்த வரப்பிரசாதம் இது.

    அறிவுக்களஞ்சியமான இணையதளங்களில் எண்ணிலடங்கா தகவல்கள், படங்கள், வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. ஆனால் பலர் பாலுணர்வை தூண்டும் ஆபாச தளங்களுக்கு சென்று பொழுதை கழிக்கிறார்கள். பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்கள் செய்யும் சேட்டையால் சிறுவர்கள், விடலைப்பருவ பையன்கள், இளைஞர்கள் பலர் அதில் சிக்கிக்கொள்கிறார்கள். இதனால் தூண்டப்படும் சிலர் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். குழந்தைகள், சிறுமிகள் என்றுகூட அந்த கயவர்கள் பார்ப்பது இல்லை.



    சுமார் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பாலியல் தொடர்பான விஷயங்களை பேசுவது, படிப்பது, படங்களை பார்ப்பது ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அன்று குதிரை கொம்பாக இருந்த விஷயம் இப்போது தண்ணீர்பட்ட பாடாகிவிட்டது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் கைங்கர்யத்தால் ஆபாசங்கள் இப்போது கைக்குள் வந்து, வயது வித்தியாசம் இன்றி எளிதாகிவிட்டது. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போய்விட்டது. மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் அந்த பக்கமே போவதில்லை. ஆனால் மற்றவர்கள் அதிலேயே லயித்து விடுகிறார்கள். சிறுவர்கள் கூட ஆபாச படங்களை பார்த்து பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டு மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, தங்கள் எதிர்காலத்தையும் தொலைத்துவிடுகிறார்கள்.

    பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டதால் சிறுவர்கள் கைது செய்யப்பட்டதாக சமீப காலங்களில் அடிக்கடி வெளியாகும் செய்திகள் சமூக நலனில் அக்கறை கொண்டவர்களுக்கு அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    பிஞ்சிலே பழுத்தால் காய் மட்டுமல்ல, வாழ்க்கையும் சுவைக்காது.

    பாலியல் குற்றசெயல்களில் ஈடுபடாமல் அவர்களை தடுத்து நிறுத்தி, நல்வழிப்படுத்துவதில் சட்டத்துக்கு மட்டுமின்றி பெற்றோர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்குமே பொறுப்பு உள்ளது.
    ×